சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டு, சீனாவின் பல முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பல விசேட கலந்துரையாடல்களை நடத்தினார்.
அதன்படி, சீனா தொலைத்தொடர்பு நிர்மாண நிறுவனம் (China Communications Construction Company Ltd) , சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம் (China Petrochemical Corporation-SINOPEC Group),வரையறுக்கப்பட்ட சீன மெடலஜிகல் கோபரேசன் நிறுவனம் (Metallurgical Corporation of China Ltd), ஹுவாவி (Huawei), பி.வை. டி ஒட்டோ (BYD Auto) போன்ற முன்னணி சீன நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து முன்னணி சீன முதலீட்டு நிறுவனங்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில், முதலீட்டாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவை அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.