Follow Us:

Friday, Jan 24

நந்திக சனத் குமாநாயக்க

கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க 1997 ஆம் ஆண்டு இலங்கை சுங்கத்தின் உதவி அத்தியட்சகராக அரசாங்க சேவையில் இணைந்து கொண்டார். மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் கல்வி கற்ற குமாநாயக்க, களனிப் பல்கலைக்கழகத்தில் முதல் தர சித்தியுடன் விஞ்ஞானப் பிரிவில் கௌரவப் பட்டம் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, உலக சுங்க அமைப்பின் (WCO)புலமைப்பரிசில் பெற்ற குமாநாயக்க, ஜப்பானில் உள்ள கொள்கைக் கற்கைகளுக்கான தேசிய பட்டப்படிப்பு நிறுவனத்தில்(GRIPS) அரச பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டம் மற்றும் அபிவிருத்திப் பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். அங்கு அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையானது சுங்க ஊழல் பிரச்சினையில் விசேட கவனம் செலுத்தியதுடன், சர்வதேச இதழ்களில் இவரின் பல கட்டுரைகள் பிரசுரமாகின. தற்போது, ​​அவர் உலக சுங்க அமைப்பால் சுங்க நவீனமயமாக்கல் ஆலோசகராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு ,சுங்க வினைத்திறன் மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். சுங்கக் கட்டமைப்புகளின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் வெளிநாடுகளில் உலக சுங்க அமைப்பு நடத்தும் நிகழ்வுகளுக்காக சர்வதேச பிரதிநிதிகள் குழுக்கள் பலவற்றுடன் இவர் பங்கேற்றுள்ளா

Top