Follow Us:

Friday, Mar 14
பிப்ரவரி 27, 2025

ஜனாதிபதி மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு அமைவான இம்முறை வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும், தொழில்சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வைத்தியர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன், செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச உள்ளிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Top