Follow Us:

Sunday, Feb 23
அக்டோபர் 25, 2024

ஜனாதிபதி இன்று பல தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள், ஈரான் மற்றும் மியன்மார் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அந்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.

வலுவான சர்வதேச பங்காளித்துவத்தை பேணுவதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், உலகின் அனைத்து நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகள், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

Top