-உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
ஜனாதிபதி மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த வருடத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இலக்கு வைக்கப்பட்ட வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கான முறைமைகள் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறாத வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு தற்போதைய நடைமுறையை விட சிறந்த முறைமையொன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறவிட வேண்டிய முழுமையான வருமானத்தை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ,ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரசல் அபோன்சு உள்ளிட்டவர்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் ஆர்.பீ.எச். பெர்னாண்டோ உள்ளிட்ட இறைவரித் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.