Follow Us:

Sunday, Nov 24
அக்டோபர் 25, 2024

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்தார்.

அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, விவசாயம், காணி, கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, வணிக, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.எம். நைமுதீன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யு. பின்னலந்த,நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Top