இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, நாட்டின் தலைவர்,நிறைவேற்றுத் தலைவர்,அரசின் தலைவர் மற்றும் முப்படைகளின் தளபதியாவார். ஜனாதிபதியின் அலுவலகம் “ஜனாதிபதி செயலகம்”, ஊடாக இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தேவையான நிருவாக மற்றும் நிறுவன வரைபு வழங்கப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி அலுவலகம் காலி முகத்திடல் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ளது. எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பழமையான கட்டிடம், 82 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட பழைய ஐந்து பழங்கால கட்டிடக்கலை பாணிகளில் ஒன்றான “அயோனியன் ” பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸின் மலை உச்சியில் உள்ள கிரேக்க தெய்வமான “அதீனா” வுக்கு அமைக்கப்பட்ட பார்த்தீனானின் தேவாலயத்தின் தோற்றத்தை ஒத்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது