Presidential Secretariat of Sri Lanka

ஊடக வெளியீடு

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் “சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு ஒன்று தேவை” என்ற தலைப்பில் வெளியான செய்தி அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் புனித ஹெரால்ட் அந்தோனி ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 88 தொகுதிகள் மற்றும் 48,909 பக்கங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்களையும் 2023 ஏப்ரல் 20 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், புனித ஹெரால்ட் அந்தோனி பாதிரியாரிடம் கையளித்தார்.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் புனித ஹெரால்ட் அந்தோனி ஆண்டகையுடன் நேற்று (05) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தொலைபேசியில் கலந்துரையாடிய போது, தான் குறித்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தயாராக உள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையின் அரசியலமைப்பிலும் வேறு எந்த சட்டத்திலும் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதன்படி, இதுபோன்ற விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது.

செனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஆயர்கள் பேரவை, ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் இது குறித்து மேலும் கலந்துரையாட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

(English) Recent News

Most popular