Presidential Secretariat of Sri Lanka

சுகாதாரத் துறையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமன்றி அனைவரினதும் பொறுப்பாகும்

  • தரம் குறைந்த மருந்துகள் என்று எதுவும் இல்லை – பதிவு செய்யப்படாத மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதில்லை – ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே.

 உலகிலேயே தலைசிறந்த சுகாதார கட்டமைப்புடன் கூடிய நமது நாட்டின் இலவச சுகாதாரத் துறையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமன்றி ஊடகங்களினதும் பொறுப்பாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே வலியுறுத்தினார்.

சுகாதாரத் துறையின் நற்பெயரைக் காக்கவும் அதன் மேன்மையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறைக்குப் பொறுப்பானவர்களுக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

உலகில் எந்தவொரு நாடும் தரக்குறைவான மருந்துகள் என எந்த வகையிலான மருந்துகளையும் உற்பத்தி செய்வதில்லை எனவும், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மட்டுமே சுகாதார அமைச்சு இறக்குமதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்தேய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளால் சிக்கல்கள் அல்லது ஒவ்வாமை ஏற்படுவது வழமை என்றும், ஆனால் அவற்றை சரியான முறையில் கையாள்வதற்கு தேவையான வழிமுறைகள் இலங்கையில் பல வருடங்களாக நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘ஒன்-ஓ-ஒன் கதா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரட்ணசிறி ஹேவகே இதனைக் குறிப்பிட்டார்.

மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க நோயாளிகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவும் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.மருந்து ஒவ்வாமை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் நிர்வாகத்திற்கோ அல்லது ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் இணையத்தளத்தில் உள்ள Pharmacovigilance ஊடாகவோ உடனடியாக முறையிட ஒன்லைன் முறை இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த வைத்தியர் ரத்னசிறி ஹேவகே,

“மருந்து ஒவ்வாமையை எவ்வாறு கையாள்வது என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் எங்களிடம் உள்ளன. ஆஸ்பத்திரி நிர்வாகம் தவிர ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் இணையத்தளத்தின்,
(https://www.nmra.gov.lk/index.php?option=com_contact&view=reporting&Itemid=191&lang=en) பக்கத்தின் ஊடாக உடனடியாக முறையிட முடியும். இதன்படி, ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு உடனடியாக செயற்படும்.

ஒரு நோயாளி தனக்கிருக்கும் ஒவ்வாமை குறித்தும் தான் பயன்படுத்தும் மருந்துகள் தொடர்பாகவும் கட்டாயமாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். சில நோயாளிகள் தினமும் சாப்பிட வேண்டிய மருந்துகளை உட்கொள்ளாமல் தங்கள் நோய் குறையவில்லை என்று கூறுகிறார்கள். பின்னர் மருந்தின் அளவை மருத்துவர் அதிகரித்து கொடுக்கிறார். இந்நிலையில் நோயாளி கடுமையான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எந்த நாடும் தரக்குறைவான மருந்துகள் என எந்த வகை மருந்துகளையும் உற்பத்தி செய்வதில்லை. அந்தந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்ட மற்றும் ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மட்டுமே சுகாதார அமைச்சு இறக்குமதி செய்கிறது. அவசர கொள்வனவின் போது கூட பதிவு செய்யப்பட்ட மருந்துகளே இறக்குமதி செய்யப்படுகின்றன.அரசு மற்றும் தனியார் துறைக்கு என தனித்தனியாக மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே சிறந்த சுகாதார கட்டமைப்பைக் கொண்ட நாடுகளாக இலங்கையும் கொஸ்டரிக்காவும் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய சிறந்த சுகாதார கட்டமைப்பை நாசமாக்குவதற்கு நாம் பங்களிப்பது நமக்கு நாமே அழிவைத் தேடிக் கொள்வதாக இருக்கும். இலவச சுகாதாரத் துறையைப் பாதுகாக்க அரசு, ஊடகங்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, குறுகிய கால தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரத் துறையின் வீழ்ச்சியை சுகாதார நிர்வாகிகள் ஊக்குவிக்கக் கூடாது. சுகாதாரத் துறையின் நற்பெயரைக் காக்க, அதன் மேன்மையைப் பாதுகாக்கப்பட வேண்டும். சுகாதார நிர்வாகிகளுக்கு அதில் முக்கிய பொறுப்பு உள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகேவுடன் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் நடாத்தப்பட்ட ‘ஒன்-ஓ-ஒன் கதா’ நிகழ்ச்சி தொடர்பான காணொளிகளை இந்த இணைப்பின் ஊடாக பெறலாம் https://youtu.be/BdG- -tTYEUE.

‘ஒன்-ஓ-ஒன் கதா’ நிகழ்ச்சியின் மூலம் வெளியிடப்படும் புதிய தகவல்களைப் பெற, இந்த இணைப்பின் மூலம் (https://tinyurl.com/101Katha) ‘ஒன்-ஓ-ஒன் கதா’ வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.

(English) Recent News

Most popular