Presidential Secretariat of Sri Lanka

நாடு எதிர்கொண்டுள்ள கடன் நெருக்கடியைத் தீர்க்க விரிவான மூலோபாய திட்டம்

  • நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
  • IDU மாநாட்டுடன் இணைந்தாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பருடன் நடைபெற்ற நேர்காணலில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும் கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதிலேயே முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாபருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜூன் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் லண்டனில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் (IDU) 40ஆவது ஆண்டு விழாவின் போது இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் சவால்கள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை சிக்கலான தலைப்புகளாக மாறியுள்ள தற்போதைய காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பாதுகாப்பான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது பற்றி ஆராய உலகத் தலைவர்கள் இந்த ஆண்டு ஒன்று கூடியிருந்தனர்.

ஸ்டீபன் ஹாபர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டமை, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அமுல்படுத்தப்பட்ட கொள்கை வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் என்பன தொடர்பில் விரிவாகக் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையின் நிதி வாய்ப்புகளை வலுப்படுத்தி நீண்டகாலத்திற்கு சாதகமான வர்த்தக சமநிலையை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தாராளமய பொருளாதார நெகிழ்வுக் கொள்கையை துரிதப்படுத்தல் மற்றும் முதலீடுகளை கவர்வதை நோக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் தமிழ் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைக்க விரும்புவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை ,புதிய பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பது குறித்தும் ஜனாதிபதி இங்கு கருத்துத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வரையறுப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் நிலவி வந்த சர்ச்சை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காணாமற்போனோர் அலுவலக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கேள்வி:

இலங்கை எதிர்கொண்டுள்ள சவாலான நிலைமை பற்றி நான் வாசித்து அறிந்துள்ளேன். அந்த சவால்களுக்கு முகம்கொடுத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் உலகம் விழிப்புடன் அவதானித்துக்கொண்டிருக்கிறது?

பதில்:

கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கை முகம்கொடுத்திருந்த நெருக்கடியான நிலைமையை பற்றி நாம் அறிவோம். இருப்பினும் அந்த நேரத்தில் நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை.

2019 ஆம் ஆண்டில் எமது கட்சியின் பிரதித் தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அத்தோடு 2019 தேர்தல் மிகவும் விசேடமானதாக அமைந்திருந்த்தோடு மக்கள் மாற்றம் ஒன்றை விருப்பினர்.

நான் கூறியதை போல மிகவும் கடுமையான தோல்வியை தழுவிக்கொண்டோம். கொவிட் தொற்று பரவலுக்கு இலக்காகியிருந்த 2020 ஆம் ஆண்டிலும் ஓகஸ்ட் மாதத்தில் நாம் தேர்தலை நடத்தினோம். அதேபோல் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருந்தேன்.

2016 ஆம் ஆண்டில் நாம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களுக்கு அமைய இலங்கை அடிப்படை தன்னிறைவை அடைவதற்காக அர்பணிப்புடன் சலுகைகளை மட்டுப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டிருந்த்து.

அதனால் 2018 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டொலர் என்ற அடிப்படை சேவை எம்மிடத்தில் இருந்தது. சிறிய அளவாக இருப்பினும் அந்த இலக்கை நாம் அடைந்தோம். அதனை பலப்படுத்திக்கொள்ளும் இயலுமையும் எம்மிடத்தில் காணப்பட்டது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் பின்னர் மேலும் ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கான இயலுமையும் எமக்கு கிடைத்தது.

நான் பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பான், இந்தியா உள்ளிட்ட ஏனைய தரப்புக்களுடன் பேசி மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான வேலைத்திட்டங்களை கொண்டு வந்திருந்தேன். அவை அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டன.

கடந்த வருடத்தின் மே 9ஆம் திகதி நாட்டிற்குள் பெரும் குழப்ப நிலை உருவாகியது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் 65 பேருடைய வீடுகளுக்கு தீ மூட்டப்பட்டன. அதனால் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலக நேரிட்டது.

அந்த நேரத்தில் ஆளும் தரப்பு எம்.பி ஒருவரை தொடர்புகொண்டு நான் பேசிக்கொண்டிருந்த போது அந்த நேரத்தில் என்னால் செய்ய முடிந்த உதவி என்னவென கேட்டேன். மறுதினமே ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பை ஏற்படுத்தி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தார். அவர் அதனை மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் செல்லுமாறு நான் ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கியிருந்தேன். இந்த நிலையில்தான், அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும் என்னை பிரதமராக்கி அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அந்த தருணத்திலும் கடந்த காலங்களில் பெறப்பட்டு, செலுத்த வேண்டிய கடன் தவணை 8 பில்லியன் டொலர்களாக இருந்தது. 2022 ஏப்ரல் மாதத்தில் இலங்கை வங்குரோத்து நாடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாம் வழமைக்கு திரும்பும் போது ஆர்பாட்டக் காரர்கள் மீண்டும் வீதியில் இறங்க ஆரம்பித்தனர். அதேபோல் ஜூலை 9 ஆம் திகதி பெருமளவானர்கள் கொழும்பில் கூடியிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தமையால். ஜனாதிபதி தப்பியோடி இலங்கை கடற்படையின் கப்பலொன்றில் தஞ்சம் அடைந்து உதவியை பெற்றுக்கொள்ள நேரிட்டது. அன்று மாலை கட்சித் தலைவர்கள் கூடி ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தீர்மானித்தனர். அதன் பின்னர் பதில் ஜனாதிபதியாக என்னை நியமித்துவிட்டு அரசியலமைப்புக்கமைய புதியவரை நியமித்த பின்னர் பிரதமர் பதவியிலிருந்து என்னை பதவி விலகுமாறு எதிர்க்கட்சியினர் கோரினர். அந்த நேரத்தில் சில ஊடகங்களின் தூண்டுதல் காரணமாக ஆர்ப்பாட்டக் காரர்கள் சிலர் எனது வீட்டிற்கும் தீ மூட்டினர். நான் பதவி விலகிச் செல்வேன் என அவர்கள் நினைத்திருந்தனர். மறுநாள் சில தூதுவர்கள் என்னை பதவி விலகுமாறு அறிவுறுத்தினர்.

சிலர் சபாநாயகரை பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தனர். எவ்வாறாயினும் அந்த இரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தமையால் நானும் பதவி விலகப்போவதில்லை என அறிவித்திருநதேன். பின்னர் ஜனாதிபதியை நாட்டிலிருந்து வெளியேற்றி மாலைத்தீவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நான் அமைச்சரவையைக் கூட்டியிருந்தேன். அதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கையகப்படுத்திய பின்னர் பாராளுமன்றத்தையும் கையகப்படுத்து முயன்றனர். சில தினங்களுக்கு பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பெரும் பிரச்சினையொன்று ஏற்பட்டிருந்தது.

அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவிடும் நிலைமை எனக்கு ஏற்பட்டது. இறுதியில் பிரதமர் அலுவலகத்தையும் கையகப்படுத்தினர். பின்னர் பாராளுமன்றத்திற்கு பேரணியாக வந்தமையால் மாலை நேரத்தில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்த முடியாத நிலைமை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது அந்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஆதரவளித்தார். பாராளுமன்றத்திற்கும் அதே நிலைமை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டமென இராணுவ தளபதிக்கு அறிவுறுத்தினேன்.

அவர்களிடத்திலிருக்கும் ஆயுதம் ஏந்தாத மிகச் சிறந்த இராணுவ படையணியை அவர்கள் களமிறக்கினர். அங்கு வந்த ஆர்ப்பாட்டக் காரர்களை சாதகமான முறையில் களைக்க அவர்களினால் முடிந்தது. ஆர்ப்பாட்ட்டத்தை களைக்கச் சென்ற 24 படைவீரர்கள் காயமடைந்தனர்.

எவ்வாறாயினும் அப்போதே ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியுடன் இருந்தேன். அப்போதிருந்த ஜனாதிபதியும் கடமைகளை பொறுப்பேற்குமாறு என்னிட்டத்தில் கேட்டுக்கொண்டதோடு பதவி விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இருப்பினும் நான் பதில் ஜனாதிபதியாக பதவியேற்பதை ஜனாதிபதி அலுவலகத்தை கையகப்படுத்திக்கொண்டிருந்தவர்கள் விரும்பவில்லை.

பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்பதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்திக்கொள்ளும் அவசியம் எனக்கு இருக்கவில்லை. பிரதம நீதியரசரின் இல்லத்தையும் பயன்படுத்தவில்லை. வீட்டின் அருகிலிருந்த விகாரைக்கு விடியற் காலையில் சென்றேன். விகாராதிபதி அங்கிருந்த பாதுகாப்புக்களையும் நீக்கியிருந்தார். பிரதம நீதியரசர் அவ்விடத்திற்கு வருகை தந்தார். அவ்விடத்திலயே எனது பதவியேற்பு நிகழ்வுகள் படம் பிடிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்ய வேண்டியது அடுத்த கட்ட நடவடிக்கையாக காணப்பட்டது. அதற்கும் எதிர்ப்புக்கள் கிளம்பின. இருப்பினும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்பதை நான் அறிவுறுதித்தியிருந்தேன்.

எவ்வாறாயினும் இவை எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல மாறாக இவற்றினூடாக இலங்கை பாராளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் ஆக்கிரமிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை நான் அறிந்துகொண்டேன்.

அதேபோல் ஆர்ப்பாட்டக் காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிவான் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டக் காரர்கள் எவரும் சிறையிடப்படவில்லை. சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் அவர்களின் பக்கமாக இருந்தமையால் அவர்களுக்கு அது வலுவாக அமைந்திருந்தது.

பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல்களின் போது சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய தடுப்பு உத்தரவின் கீழ் சிலர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் அலுவலகத்திற்குள் சென்று எவ்வாறு அதனை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முடியும் என்பதை ஆராயுமாறு இராணுவத்தினரை அறிவுறுத்தினேன். அதன் பின்னர் ஜனாதிபதி அலுவலகத்தையும் மாளிகையும் மீட்குமாறு கேட்டுக்கொண்டேன்.

ராஜபக்‌ஷவினர்களின் தலைமையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவும் கிட்டியதால் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட தேர்தலை 135 வாக்குக்களால் வெற்றிக்கொள்ள முடிந்தது. என்னை தேர்தல் ஒன்றில் களமிறக்குவதே அவர்களின் நோக்கமாகவும் இருந்தது.

வர்த்தகர்கள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கிராமிய பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் அமைதிகாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்கிமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் என்னோடு இருக்காவிட்டாலும் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்து வேண்டும் நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருந்தனர்.

அதனால் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திய பின்னர் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை முன்னெடுத்தோம். அதற்குரிய கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டோம்.

செப்டெம்பர் மாதத்தின் பின்னர் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தி நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் தொடர்பிலான உபாயமார்க்கங்கள் தொடர்பில் பாராளுமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. அதேபோல் முழு நாட்டிலும் முழுமையான மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

தாராளவாத பொருளாதார கொள்கைகளின் கீழ் பெருமளவான முதலீடுகளை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நீண்ட கால பலன்களை அளிக்கும் வகையிலான வர்த்தகத்துறை முதலீடுகளும் அவசியப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் மேற்படிச் செயற்பாடுகளின் பெருமளவான முன்னேற்றங்களை காண முடியும் என நம்புகிறேன்.

கேள்வி:

பொருளாதார நெருக்கடிகள் என்பது பொதுவாக அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். அதேபோல் அது பொதுப் பிரச்சினையாகும். துறைசார் ஒத்துழைப்புக்களே அதற்காக நீண்டகால தீர்வாக அமையும்.

பதில்:

வர்த்தகச் சந்தைகளை இலக்கு வைத்த உபாயங்கள் மட்டுமே தற்போது காணப்படும் மாற்றுவழியாகும். உண்மையாக சொல்வதாயின் இதனை விட மாற்று வழிகள் எவையும் கிடையாது. நீண்ட காலமான வர்த்தகச் சந்தையின் ஊடகவே பிரச்சினைகள் நிவர்த்திக்கப்படுகின்றன.

கேள்வி:

ஜனநாயகத்தை தவிர்ந்த அனைத்து ஆட்சி முறைமைகளும் பயங்கரமானது என்பதை வின்ஸ்டன் சர்ஷில் ஒரு முறை நேரடியாகவே கூறியிருந்தார். பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்வதற்கு இருக்கின்ற இறுதி அஸ்திரம் பழமைவாதமாகும் என்பதை உணரும் வரையில் சோசலிசம், பாதுகாப்புவாதம், எண்ணியல் வாதம், ஜனரஞ்சகவாதம் ஆகியவற்றை பின்பற்றுவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடத்தில் இலங்கை வெளிநாட்டு தொடர்பாடல்களின் அவசியத்தை எவ்வாறு காண்கிறது. அதன் உபாயங்கள் மற்றும் தொடர்பாடல்கள் யாதெனவும் அடுத்தபடியாக முகம்கொடுக்கவுள்ள அவதானம் மிக்க நிலைமை எவ்வாறானது?

பதில்:

தெற்காசியாவை முதன்மையாக கொண்டதாகவே இலங்கையின் உபாயமார்க்க செயற்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆசிய வலய நாடுகளான இந்நியா, ஜப்பான், மத்திய கிழக்கு, சீனாவுடன் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்கிறோம். பொதுநலவாய நாடுகளுடன் ஐரோப்பாவுடன் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ளவும் நாம் முயற்சிக்கிறோம்.

கேள்வி:

போட்டிச் சந்தை அழுத்தங்கள், கொவிட் தொற்றுநோய், குறிப்பாக உக்ரைனின் தற்போதைய மோதல் நிலைமை காரணமாக, அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும், சீனாவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே வேகமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இலங்கையின் நிலைப்பாடு என்ன? மேலும், அதற்கு என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள்?

பதில்:

நாங்கள் உலகளாவிய தெற்கு மற்றும் ஆசியாவின் நிலைப்பாட்டுடன் இருக்கிறோம். உலக வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டும் நமக்குத் அவசியம்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் நாடுகளின் கண்ணோட்டத்தை கருத்தில் கொள்வதில் பசிபிக் மற்றும் பிற பிரச்சினைகள் மிகவும் முக்கியமானவை. சீனாவின் எழுச்சி பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, சீனாவின் பொருளாதார வளர்ச்சி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைக் காண இன்னும் 20-25 ஆண்டுகள் ஆகும். பலதரப்பு உறவுகள் வலுப்பெறுவதுடன், தற்போதுள்ள இருதரப்பு இலங்கை-அமெரிக்க உறவுகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

இங்கு இலங்கையின் வெளியுறவுக் கொள்கை முக்கியமல்ல. ஆரம்பம் முதலே நாம் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கி வருகிறோம். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நாம் கூட்டாக தீர்க்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரு வல்லரசிற்கு அடிபணிந்து செய்ய முடியாது. சுமுகமாக ஒத்துழைப்பதன் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகளைத் தணிக்க முடியும்.

கேள்வி:

நமது பாதுகாப்புக்கு அமெரிக்கா முக்கியம் என்பது அடிக்கடி பேசப்படும் ஒன்று. மேலும் சீனாவின் ஆதரவு நமது பொருளாதாரத்திற்கு முக்கியமானது. சீன முதலீடு மற்றும் சீன வர்த்தகம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். மறுபுறம், சீனாவுடனான பரந்த உறவு சிக்கலாக இருக்கிறதா?

பதில்:

மிகப்பெரிய தனியார் துறை முதலீட்டாளராக இருக்கும் சீனா, அதிக இருதரப்புக் கடன்களை வழங்கும் நாடு. நமது நாட்டின் கடன் மறுசீரமைப்பை எவ்வாறு கையாள்வது என்று சீனா தயங்கியது.

பாரிஸ் கிளப்புடன் இணைந்து செயலாற்றுவதற்கு எமக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவும் சீனாவும் அதை வெளியில் இருந்து கவனித்து வந்தன. இருப்பினும், இந்தியா பின்னர் பாரிஸ் கிளப்பின் யோசனையில் இணைந்தது.

பொதுவான தளத்தில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு பார்வையாளராக மட்டுமே சீனா பங்கேற்றது. மேலும் எங்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவே சீனா ஆர்வம் காட்டியது. சீனா உள்ளிட்ட பலம்வாய்ந்த நாடுகள் செயற்திறனுடன் பங்காற்றுகின்றன.

கேள்வி:

உங்கள் நாடு, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் முக்கியமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. இந்த நிலைமையை எப்படிப் பார்க்கிறீர்கள்

பதில்:

தெற்கில் உள்ள பெரும்பாலான நாடுகள் வெளியில் இருந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றன.பல ஆசியான் நாடுகள் சில செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுக்கின்றதோடு பெரும்பாலான நாடுகள் நடுநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. ஐரோப்பாவில் மோதல் நிலை தொடங்கியுள்ளது. எனவே நாங்கள் சுதந்திரமான, உக்ரைனை மட்டுமே நம்புகிறோம். நாங்கள் அதை எவ்வாறு தீர்க்கிறோம் என்ற கேள்வி உள்ளது மற்றும் ரஷ்யா அதை மீண்டும் செய்ய முடியும், ஆனால் இறுதியில் ரஷ்யா மட்டுமே இதை தீர்க்க முடியும்.

(English) Recent News

Most popular