Presidential Secretariat of Sri Lanka

ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்விற்கு அரச அனுசணை

இலங்கை ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்விற்கு முழுமையான அரச அனுசரணை வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் புத்தசாசனத்தைப் பேணிக்காக்க கடமைப்பட்டுள்ளது என்ற வகையில் மகா சங்கத்தின் தலைமையிலான அனைத்து பீடங்களையும் வலுவூட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது “உப சம்பதா” நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் “உப சம்பதா” நிகழ்வு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் மாத்தளை ஸ்ரீ சங்கபோதி பிரிவெனாவை மையப்படுத்தி மகாவலி கங்கையின் கிளை நதியான சுதுகங்கையை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள சீமாமாலகய வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

13 ஜூன் 1863 காலி ஆற்றின் உடகுக்கேபா எல்லையில் தொடங்கிய உபசம்பதா இந்த நிகழ்வுடனேயே ராமன்ய பீடம் ஆரம்பிக்கப்பட்டதோடு, 160 வருடங்களாக இந்நிகழ்வானது அரச அனுசரணையுடன் நடைபெற்று வருகிறது.

இலங்கை ராமன்ய பீடத்தின் சாசன பாதுகாப்பு தலைவராக மறைந்த தலைவர் டீ.எஸ் சேனநாயக்க அவர்களே விளங்கினார்.

ஜூலை 21 ஆம் திகதி மாத்தளையில் இடம்பெறவுள்ள 73ஆவது உபசம்பதாக நிகழ்வின் போது 200 இளம் பிக்குகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படும்.

இம்முறை இடம்பெறவுள்ள உப சம்பதா நிகழ்வு தொடர்பிலான அடுத்த கலந்துரையாடல் மாத்தளை மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் மே (18) நடைபெறவுள்ளதோடு அங்குள்ள அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் காணப்படும் முன்னேற்றங்கள் பற்றியும் ஆராயப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு அறிவித்த ஜனாதிபதியின் செயலாளர் நிகழ்வை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை ராமன்ய பீடத்தில் மாகாநாயக்க தேரர் வண. ஸ்ரீ விமல தேரர், அநுநாயக்க தேரர்களான மாத்தளே தம்மகுசல தேரர், நெதகமுவே விஜயமைத்திரி தேரர் உள்ளிட்ட பீடத்தின் ஏனைய தேரர்கள்,

புத்தசாசன, மத அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சர் ரமேஸ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அலகியவன்ன, சாணக்க வக்கும்புற, அசோக பிரியந்த, இலங்கை ராமன்ய பீடத்தின் சாசன பாதுகாப்புத் சபைத் தலைவர் தேசபந்து கரு ஜயசூரிய, பொருளாளர் மேர்வின் குணவர்தன, சிரேஷ்ட உப தவிசாளர் கேசர லால் குணசேகர ஆகியோருடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள் தலைமையிலான அதிகாரிகள், இராணுவ தளபதி லெப்டினண் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular