Presidential Secretariat of Sri Lanka

பெருமளவான உள்நாட்டு வெளிநாட்டவர்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்ற “வசத் சிரிய 2023”

  • புத்தாண்டு நிகழ்வுகளை ஜனாதிபதியும் பார்வையிட்டார்.
  • வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.

“வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (22) கொழும்பு சங்கிரீலா மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது .

“வசத் சிரிய 2023” புத்தாண்டு அழகியாக கொடிகாவத்தயை சேர்ந்த இருஷி காவ்யா அபஷேக தெரிவு செய்யப்பட்டதோடு, இரண்டாம் இடத்தை மொறட்டுவையை சேர்ந்த தாருகா ரஷ்மினியும் மூன்றாம் இடத்தை குருநாகல் கல்கமுவையை சேர்ந்த சுபாஷினி புல்பமாலாவும் பெற்றுக்கொண்டனர்.
“வசத் சிரிய 2023” புத்தாண்டு அழகனாக மொறட்டுவையை சேர்ந்த சுபோத தனுஷ்கவும் தெரிவு செய்யப்பட்டதோடு, இரண்டாம் இடத்தை விகஷிதவும் மூன்றாம் இடத்தை கிரிந்தவெலயை சேர்ந்த அவிஷ்க நிவர்தனவும் பெற்றுக்கொண்டனர்.

புத்தாண்டு அழகன் அழகிக்கு பணப்பரிசாக 150,000 ரூபாயும் 1 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் பரிசாக வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்திற்கு 100,000 ரூபா வீதமும் மூன்றாம் இடத்துக்கு 50,000 ரூபா வீதமும் வழங்கப்பட்டதோடு, இறுதி சுற்றுக்கு தெரிவான அழகன் மற்றும் அழகிகளுக்கு ஆறுதல் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

திறந்த சுற்று மரதன் ஓட்டம் (ஆண்கள்) போட்டியில் முதலிடம் பெற்ற ஹெச்.டி.எஸ்.டி குணசேகரவுக்கு 75,000 ரூபாயும் இரண்டாம் இடம் பெற்ற எம். சிவராஜனுக்கு 50,000 ரூபாயும் மூன்றாம் இடம் பெற்ற கே. சண்முகேஸ்வரனுக்கு 30,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. நான்காம் முதல் பத்தாம் இடம் வரையான வெற்றியாளர்களுக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

திறந்த சுற்று மரதன் ஓட்டம் (பெண்கள்) போட்டியில் முதலிடம் பெற்ற எம்.பீ.எஸ். மதுமாலிக்கு 50,000 ரூபாயும் இரண்டாம் இடம் பெற்ற திருமதி எம்.எம்.ஹேரத்துக்கு 30,000 ரூபாயும் மூன்றாம் இடம் பெற்ற கே. ஜீ.எம்.எல்.ஏ. குமாரிக்கு 20,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. நான்காம் முதல் பத்தாம் இடம் வரையான வெற்றியாளர்களுக்கு 7500 ரூபாய் பணப் பரிசும் வழங்கப்பட்டது.

ஸ்டேண்டட் சைக்கிளோட்ட போட்டி (ஆண்கள்) போட்டியில் முதலிடம் பெற்ற அவிஷ்க மெடொன்ஸாவுக்கு 100,000 ரூபாயும் இரண்டாம் இடம் பெற்ற திருமதி எம்.ஏ.எஸ். திமந்தவிற்கு 75,000 ரூபாயும் மூன்றாம் இடம் பெற்ற கிஹான் புஷ்பகுமாரவுக்கு 50,000 ரூபாய் பணப் பரிசும் வழங்கப்பட்டது.

ஸ்டேண்டட் சைக்கிளோட்ட போட்டி (பெண்கள்) போட்டியில் முதலிடம் பெற்ற ஏ.எம்.எம்.டி .டில்ருப்ஷிக்கு 50,000 ரூபாயும் இரண்டாம் இடம் பெற்ற ஜீ.ஏ.எஸ். பிரியதர்ஷினிக்கு 40,000 ரூபாயும் மூன்றாம் இடம் பெற்ற மதுமாலி பெர்னாண்டோவிற்கு 30,000 ரூபாய் பணப் பரிசும் வழங்கப்பட்டது.

அரச துறைக்கான கயிறு இழுத்தல் (ஆண்கள்) பிரிவில் முதலிடம் பெற்ற பிரதமரின் பாதுகாப்பு பிரிவிற்கு 30,000 பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு 20,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

அரச துறைக்கான கயிறு இழுத்தல் (பெண்கள்) பிரிவில் முதலிடம் பெற்ற ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு 30,000 பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஜனாதிபதி செயலகத்திற்கு 20,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
திறந்த சுற்று கயிறு இழுத்தல் ( ஆண்கள்) பிரிவில் முதலிடம் பெற்ற இராணுவ A அணிக்கு 80,000 பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற எலபிட்டிவல லயன்ஸ் அணிக்கு 60,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

திறந்த சுற்று கயிறு இழுத்தல் ( பெண்கள்) பிரிவில் முதலிடம் பெற்ற இராணுவ அணிக்கு 80,000 பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பிரதமரின் பாதுகாப்பு பிரிவிற்கு60,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

அரச துறை, திறந்த பிரிவு மற்றும் வெளிப்பிரிவு என்ற மூன்று பிரிவுகளின் கீழ் பல்வேறு போட்டி நிகழ்சிக்கள் இடம்பெற்றிருந்ததோடு, அரச நிறுனவங்களின் ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

சிறுவர்களும் பெரியவர்களும் விருப்பத்துடன் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்ததோடு, வெற்றி பெற்ற அனைவரும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அமெரிக்க, ஐக்கிய ராஜ்ஜியம், இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, சீனா, ஜப்பான், பலஸ்தீன், பங்களாதேஷ், கியூபா, மியன்மார், தாய்லாந்து, குவைட், தென் கொரியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை பிரதிநித்துவப்படுத்து ராஜதந்திரிகளும் அவர்களின் குடும்பத்தவர்களும் துதரக ஊழியர்களும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்ததோடு, இந்நாட்டிற்கு சுற்றுலாப் பிரயாணம் மேற்கொண்டுள்ள வௌிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளும் களிப்புறும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

பாரம்பரிய சமூகத்தார் கிராமர் மற்றும் கிராமிய வீட்டுக் கட்டமைப்புக்கும் இடையில் காணப்பட் அழகிய தொடர்புகளை எடுத்துக்காட்டும் வகையிலான் கிராமிய வீட்டுக் கட்டமைப்பொன்றும் இங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். தின்பண்டங்கள், ஆடையணிகள் உள்ளிட்ட புத்தாண்டு மரபுகளை கொண்டதான கிராமிய வீட்டின் வடிவம் காட்சிப்படுத்தியதோடு, கிராமிய விளையாட்டுகள் உள்ளிட்ட காட்சிப்படுத்தக்கூடிய பல்வேறும் அம்சங்கள் அதற்குள் உள்ளடங்கியிருந்தன. கிராமிய ஊஞ்சல், மூங்கில் வெடி, கடைவீதி, மருத்துவ வீடு வீடு உள்ளிட்டவைகளும் மேற்படி வளாகத்தை மெருகூட்டின.

புத்தாண்டு நிகழ்வுகள் இடம்பெறும் வளாகத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கிருந்த மக்களோடு சுமூகமாக கலந்துரையாடினார்..

அதேபோல் கிராமிய வீடு மற்றும் மருத்துவ வீடு ஆகியவற்கை மேற்பார்வை செய்த ஜனாதிபதி அங்குள்ள சிறப்பம்சங்களை கண்டுகளித்த வெளிநாட்டவர்களுடனும் சுமுகமாக கலந்துரையாடி அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

அதனையடுத்து வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிவைக்கும் நிகழ்வுகளில் பங்கெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கயிறு இழுத்தல் போட்டிகளையும் பார்வையிட்டார்.

அத்தோடு போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீர வீராங்கணைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வுகளில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனுசரணை வழங்கிய நிறுவன்ஙகளின் பிரதானிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

புத்தாண்டு அழகிகளுக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் செனுகா செனவிரத்ன மற்றும் கொழும்பு முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்க ஆகியோரால் கிரீடம் அணிவிக்கப்பட்டதோடு, ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளினால் புத்தாண்டு அழகன் அழகிகளாக தெரிவாகியோருக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க இன்று காலை புத்தாண்டு நிகழ்வுகளை பார்வையிட்தை தொடர்ந்து அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், அமைச்சரவை செயலாளர்கள் தலைமையினால் அரச அதிகாரிகளும் நிகழ்வு வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

“வசத் சிரிய 2023” இசை நிகழ்ச்சி மேற்படி வளாகத்தில் இரவு 7.00 மணியளவில் ஆரம்பமாகியதோடு, சஹன் ரன்வலவின் ரன்வல இசைக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டதோடு, பின்னர் நாட்டின் பிரபலமான இசைக்குழுவான மிட்லேன் இசைக்குழு நிகழ்ச்சியை வழிநடத்தியது.

பிரபலமான பாடகர்களான ரூகாந்த குணதிலக, சனுக விக்கரமசிங்க, விண்டி குணதிலக, டஷ்னி பெரேரா துல்மினி பெரேரா, ஹிஜாஷ் டலீஷ், அஷான்யா பிரேமதாச, உள்ளிட்ட பார்கள் மற்றும் பாடகிகளின் பாடல்களால் “வசத் சிரிய 2023” வண்ணமயமானதோடு நிகழ்வை கண்டுகளிக்க பெருந்திரலானவர்கள் வந்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் வழிநடத்தலின் கீழ் அமைச்சுக்கள் உட்பட அரச நிறுவனங்களுடன் இணைந்து ஜனாதிபதி அலுவலகத்தின் ஊழியர்கள் மற்றும் நலன்புரி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

(English) Recent News

Most popular