Presidential Secretariat of Sri Lanka

“வசத் சிரிய – 2023” புத்தாண்டு அழகன் – அழகி போட்டிகள், மரதன் ஓட்டப் போட்டி மற்றும் சைக்கிளோட்ட போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் குவிகின்றன

  • வசத் சிரிய – 2023 புத்தாண்டு அழகிக்கு தங்கப் பரிசுடன் பணப்பரிசு.
  • புத்தாண்டு அழகனுக்கு 150,000 பணப்பரிசுடன் பெறுமதியான பரிசுகள்.
  • மரதன் ஓட்டப் (ஆண்கள்) போட்டியின் முதலிடத்திற்கு 75,000 ரூபா பரிசு, பெண்கள் பிரிவில் முதலிடத்திற்கு 50,000 ரூபா பரிசு.
  • ஸ்டேண்டட் சைக்கிளோட்டம் (ஆண்கள்) பிரிவின் முதலிடத்திற்கு 100,000 ரூபா பெண்கள் பிரிவின் முதலிடத்திற்கு 50,000 ரூபா.

கொழும்பு சங்கிரீலா திடலில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ‘வசத் சிரிய – 2023’ தமிழ் – சிங்கள புத்தாண்டு போட்டி நிகழ்வுகளை, மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள நிலையில் புத்தாண்டு அழகன் – அழகி போட்டிகள், மரதன் ஓட்டப் போட்டி மற்றும் சைக்கிளோட்ட போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் கிடைத்துள்ளன.

பல மாகாணங்களை சேர்ந்தவர்களும் இந்த போட்டிகளில் பங்கெடுக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் வெவ்வேறான குழுக்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளன.

உள்நாட்டு பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அரச துறையினருக்கும், திறந்த மற்றும் வெளிப்பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இப்புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“வசத் சிரிய – 2023” அழகி போட்டியில் பங்கெடுக்க 20 முதல் 35 வயதிற்குட்பட்ட யுவதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வசத் சிரிய – 2023 புத்தாண்டு அழகியாக கிரீடத்தை சுவீகரிப்பவருக்கு தங்க பரிசுடன் 150,000 பணப் பரிசு மற்றும் ஏனைய பரிசுகள் பலவும் வழங்கப்படும். இரண்டாம் இடத்திற்கு 100,000 பணப்பரிசும் ஏனைய பரிசுகளும் வழங்கப்படும் அதேநேரரம் மூன்றாம் இடத்திற்கு 50,000 பணப்பரிசும் ஏனைய பரிசுகளும் வழங்கப்படும்.

வசத் சிரிய – 2023 புத்தாண்டு அழகனாக கிரீடத்தை சுவீகரிப்பவருக்கு 150,000 பணப் பரிசு மற்றும் ஏனைய பரிசுகள் பலவும் வழங்கப்படும், இரண்டாம் இடத்திற்கு 100,000 பணப்பரிசும் ஏனைய பரிசுகளும் வழங்கப்படும் அதேநேரம் மூன்றாம் இடத்திற்கு 50,000 பணப்பரிசும் ஏனைய பரிசுகளும் வழங்கப்படும்.

இதுவரையிலும் விண்ணபிக்காதவர்கள் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து chiefacct.pd@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.04.2023 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு முன்னதாக, 03 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட வர்ணப் புகைப்படத்துடன் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலதிக தகவல்களை 0702025095, 0718 381 004 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

மரதன் ஓட்டப் போட்டிகளில் 16 வயதுக்கு மேற்பட்ட வீர வீராங்கணைகள் பங்குபற்றலாம். போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் 20 கிலோ மீற்றர்களுக்கும் அதிகமான தூரம் ஓடக்கூடியவர்கள் என வைத்திய சான்றிதழுடன் 2023 ஏப்ரல் 21 ஆம் திகதி 12.00 மணிக்கு முன்பாக Priyanthalalwkas@gmail.com மின்னஞ்சல் முகவரி அல்லது WhatsApp எண் 0710573828 ஊடாகவும் அவற்றை அனுப்பலாம்.

மரதன் போட்டிகளின் (ஆண்கள்) முதலாமிடம் பெறுபவருக்கு 75,000 ரூபாவும் இரண்டாம் இடம் பெறுவபவருக்கு 50,000 ரூபாவும் மூன்றாமிடம் பெறுபவருக்கு 30,000 ரூபாவும் வழங்கப்படும். நான்கு தொடக்கம் பத்து வரையிலான இடங்களை பெறுவோருக்கு 10,000 ரூபா வீதம் வழங்கப்படும்.

மரதன் போட்டிகளின் (பெண்கள்) முதலாமிடம் பெறுபவருக்கு 50,000 ரூபாவும் இரண்டாம் இடம் பெறுவபவருக்கு 30,000 ரூபாவும் மூன்றாமிடம் பெறுபவருக்கு 20,000ரூபாவும் வழங்கப்படும். நான்கு தொடக்கம் பத்து வரையிலான இடங்களை பெறுவோருக்கு 7,500 ரூபா வீதம் வழங்கப்படும்.

ஸ்டேண்டட் சைக்கிளோட்டப் போட்டிகள் (ஆண் /பெண்) நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படவுள்ள நிலையில், 1973 வருடத்திற்கு பின்னரும் 2004 ஆம் ஆண்டிற்கு முன்னரும் பிறந்த இலங்கை சைக்கிளோட்ட (ஆண்/ பெண்) வீர வீராங்கணைகள் இப் போட்டியில் பங்குபற்றலாம். போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் வைத்திய சான்றிதழுடன் 2023 ஏப்ரல் 21 ஆம் திகதி 10.00 மணிக்கு முன்பாக wasathsiriya2023race@gmail.com மின்னஞ்சல் முகவரி அல்லது WhatsApp எண் 0788429688 ஊடாகவும் அவற்றை அனுப்பலாம்.

ஸ்டேண்டட் சைக்கிளோட்ட போட்டிகள் (ஆண்கள்) முதலாமிடம் 100,000 ரூபாவும், இரண்டாம் இடத்திற்கு 75,000 ரூபாவும், மூன்றாமிடத்திற்கு 50,000 ரூபாவும், நான்காம் இடத்திற்கு 30,000 ரூபாவும் ஐந்தாம் இடத்திற்கு 20,000 ரூபாவும் 6 – 10 வரையான இடங்களுக்கு 9,000 ரூபா வீதமும் 11- 15 ஆம் இடங்களுக்கு 5,000 ரூபா வீதமும் வழங்கப்படவுள்ளது.

பெண்களுக்கான போட்டியில் முதலாமிடம் பெறுபவருக்கு 50,000 ரூபாவும், இரண்டாம் இடத்திற்கு 40,000 ரூபாவும், மூன்றாமிடத்திற்கு 30,000 ரூபாவும், நான்காம் இடத்திற்கு 20,000 ரூபாவும் ஐந்தாம் இடத்திற்கு 15,000 ரூபாவும் 6 – 10 வரையான இடங்களுக்கு 9,000 ரூபா வீதமும் வழங்கப்படவுள்ளது.

கயிறு இழுத்தல் போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் புத்தாண்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கும் தினத்திற்கு முன்னதாக ஏற்பாட்டு குழுவினருக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க முடியும் என்பதோடு, மேலதிக தகவல்களுக்கு 0717880695 எனும் இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.

போட்டிகள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்படிவங்களுக்காக www.pmd.gov.lk இணையதளத்திற்கு பிரவேசிக்கவும்.

இந்நாட்டிற்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் புத்தாண்டு சிறப்பம்சங்களை கண்டுகொள்ளும் வகையில் பல்வேறு போட்டி நிகழ்வுகளுடன் கூடியதாக புத்தாண்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். புத்தாண்டு நிகழ்வுகளின் நிறைவம்சமாக இரவு 7.00 மணிக்கு குறித்த வளாகத்திலேயே மாபெரும் இசை நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(English) Recent News

Most popular