Presidential Secretariat of Sri Lanka

புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.

வளர்பிறை தரிசனம், பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டுப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், சுப காரியங்களை ஆரம்பித்தல் கைவிசேடம் பெறுதல், உணவு உண்ணுதல், தலைக்கு மருத்துநீர் வைத்தல், தொழிலுக்காக புறப்படுதல், மரம் நடுதல் போன்ற சுப நேரங்கள் இதில் அடங்கும்.

கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, மேலதிக செயலாளர் திலக் நந்தன ஹெட்டியாரச்சி, பணிப்பாளர் (ஊக்குவிப்பு) கலாநிதி பிரசாத் ரணசிங்க, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் பாக்யா சி. கட்டுதெனிய உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளவும்)

(English) Recent News

Most popular