Presidential Secretariat of Sri Lanka

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , திறைசேரிக்கு 03 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அன்பளிப்புச்செய்துள்ளது. இதற்கான காசோலையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, மருந்து கொள்வனவு, அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கடந்த வருடம் ஈட்டிய செயற்பாட்டு வருமானத்தில் இருந்து மேலதிக தொகை இவ்வாறு வழங்கப்பட்டது.

இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு வழங்கிய மொத்தத் தொகை 3382 மில்லியன் ரூபாவாகும். மூன்று பில்லியன் ரூபா ஒரேயடியாக வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு இதுவரை வழங்கிய மொத்தத் தொகை 3382 மில்லியன் ரூபாவாகும். மூன்று பில்லியன் ரூபா ஒரேயடியாக வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதில் 100 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையும் இதன் போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்தக் காசோலையை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கையளித்தார்.

(English) Recent News

Most popular