Presidential Secretariat of Sri Lanka

தீ வைப்பு, கொள்ளை மற்றும் கொலை உட்பட அனைத்து வகையான சொத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்க ஜனாதிபதியால் விசாரணை ஆணைக்குழு நியமனம்…..

2022-03-31 மற்றும் 2022-05-15 திகதிகளுக்கு இடையில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற தீவைப்பு, கொள்ளை மற்றும் கொலை உட்பட அனைத்து வகையான சொத்துக்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி வழக்கறிஞர் திரு பீ.பீ. அலுவிஹாரே தலைமையிலான ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க, மேலதிக பிரதம மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ் வசந்த குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனெக ஹேரத் அவர்கள் இதன் செயலாளராக செயற்படுவார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (01) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அவர்களினால் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

02.06.2022

(English) Recent News

Most popular