Presidential Secretariat of Sri Lanka

மாணிக்க கங்கைக்கான புதிய நுழைவாயில் சுவர் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

கதிர்காமம் பெரிய கோவில் தீர்த்தமான மாணிக்க கங்கைக்குரிய புதிய நுழைவாயில் சுவர் நிர்மாணப்பணிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (01) ஆரம்பிக்கப்பட்டன.

ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மற்றும் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர ஆகியோரும், இந்த நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதனையொட்டி, “சுரகிமு கங்கா” (நதிகளைக் காப்போம்) திட்டத்தின் கீழ், சுற்றாடல்துறை அமைச்சினால் டிரெக்டர் வண்டியொன்றும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனமொன்றும், கதிர்காமம் பெரிய கோவிலுக்குப் பரிசளிக்கப்பட்டது.

மாணிக்க கங்கையில் வீசப்படும் குப்பைகூழங்கள் மற்றும் திண்மக் கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேலைத்திட்டமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக, ஜனாதிபதி அவர்களினால் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர அவர்களிடம் இந்த வாகனங்கள் கையளிக்கப்பட்டன.

அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

(English) Recent News

Most popular