Presidential Secretariat of Sri Lanka

ஜனாதிபதி தலைமையில் ‘மித்தானிசங்ச’ நூல் வெளியீட்டு விழா…

சங்கைக்குரிய மாபலகம புத்தசிறி நாயக்க தேரரால் எழுதப்பட்ட சாசன வாழ்வு குறித்து வண. ‘மித்தானிசங்ச’ நூல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது.

தேரரது சாசன வாழ்வின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுதப்பட்ட இந்த நூலை, விசித்தர தம்ம கதிகா பொரளை கோவித தேரர் தொகுத்து வழங்கினார். ரத்மலானை கொத்தலாவலபுர சமாதி பௌத்த நிலையத்தில் இன்று (22) முற்பகல் இடம்பெற்ற இவ்வைபவத்தின் போது, ஜனாதிபதி அவர்களினால் சங்கைக்குரிய மாபலகம புத்தசிறி தேரரிடம் மூலப்பிரதி கையளிக்கப்பட்டது.

தற்போது நிலவும் தொற்று நோய்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என மல்வத்து பீடத்தின் அனுநாயக்க அதி வணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் தனது அனுசாசன உரையின்போது தெரிவித்தார்.

தடுப்பூசி மூலம் இலங்கை மக்கள் அனுபவிக்கும் உளவியல் நிவாரணம் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அளப்பரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

மகாநாயக்க அநுநாயக்க தேரர் மற்றும் மஹா சங்கத்தினர், வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular