Presidential Secretariat of Sri Lanka

வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

தீபத்திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்கி ஒளிபெற்று நல்வாழ்வூ வாழ்வதற்கான பிரார்த்தனையூடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி அன்பையூம் மகிழ்ச்சியையூம் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் இன மற்றும் சமய நல்லிணக்கத்தையூம் பரஸ்பர புரிந்துணைர்வையூம் மேம்படுத்துவதற்கு இத்தகைய கலாசார விழாக்கள் பெரிதும் உதவூம் என்பது எனது கருத்தாகும்.
முழு உலகமும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்;வேறு பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது மனித உள்ளங்களுக்கு அமைதியை தருகின்றது. இந்த தீபத் திருநாளில் அந்த அமைதிக்காக எமது நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களும் ஒரு மனதாக கடவூளுக்காக அர்ப்பணிப்புகளை செய்வர் என்பது எனது நம்பிக்கையாகும். அது சிறந்ததோர் சமூகத்தையூம் ஆரோக்கியமான வாழ்வையூம் கட்டியெழுப்பும் எமது நோக்கத்திற்கு ஆசீர்வாதமாக அமையூம் என நான் எண்ணுகின்றேன்.
இந்த தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் அவர்கள் எதிர்பார்க்கும் உள அமைதி கிடைக்க எனது பிரார்த்தனைகள்.

கோட்டாபய ராஜபக்ஷ
2020 நவம்பர் மாதம் 14ஆம் திகதி

(English) Recent News

Most popular