Presidential Secretariat of Sri Lanka

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிப்பு….

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.

இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உப்புல் பெரேராவினால் முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதி அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

உலகப் போரில் உயிரிழந்த படை வீரர்களை நினைவுகூர்ந்து இலங்கை முன்னாள் படை வீரர்களின் சங்கம் 1944ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து வருகின்றது.

இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் யுத்தத்தில் இறந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கும் அங்கவீனமுற்ற படை வீரர்களின் நலன் பேணலுக்காகவும் செலவிடப்படுகின்றது.

இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கம் கொவிட் 19 நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபா அன்பளிப்பை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர்.

இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய, பொருளாளர் மேஜர் ஷாந்திலால் கங்கானம்கே பொப்பி நினைவு தினக் குழுவின் தலைவர் கெப்டன் குமா கிரிந்தே ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular