Presidential Secretariat of Sri Lanka

நாம் வரலாற்று முக்கியத்துவமிக்க புனித தலதா சின்னத்தை பாதுகாத்ததைப் பார்க்கிலும் அதன் ஆசிர்வாதத்தினால் எமது தாய் நாடு பாதுகாப்பு பெற்றது

  • விகாரைகள், பள்ளிகள், கோவில்கள் மூலம் கட்டியெழுப்பப்படும் சமூகத்தை பணத்தினால் கட்டியெழுப்ப முடியாது…
  • வரலாற்று முக்கியத்துவமிக்க புனித தலதா சின்னத்திற்காக வழங்கப்பட்டுள்ள வரலாற்றுப் பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றுவேன்…

                                                       -தலதா பெரஹர நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு.

நாம் வரலாற்று முக்கியத்துவமிக்க புனித தலதா சின்னத்தை பாதுகாத்ததைப் பார்க்கிலும் அதன் ஆசிர்வாதத்தினால் எமது தாய் நாடு பாதுகாப்பு பெற்றது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

புத்த பெருமானுக்கு வழங்கும் கௌரவத்தை போன்று புண்ணியமிக்க தலதாவுக்கும் வழங்குவதுடன், பண்டைய பாரம்பரியங்களுக்கு ஏற்ப அதனை நிறைவேற்றும் கடப்பாட்டையும் கொண்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா பெரஹர வெற்றிகரமாக நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

எமது தேசத்தின் முக்கியமான கலாசார விழாவாக கருதப்படும் கண்டி எசல பெரஹர பண்டைய பாரம்பரியங்களுடன் வெற்றிகரமாக நிறைவுபெற்றதை குறிக்கும் எசல பெரஹர சந்தேஷப் பத்திரம் தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பெரஹரவில் சென்ற யானைக் குட்டிக்கு ஜனாதிபதி அவர்கள் பழங்களை வழங்கினார்.

எசல பெரஹர நிறைவு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி அவர்கள் கண்டி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நாக மரக்கன்றொன்றை நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், தலதா மாளிகையின் தியவதன நிலமே உள்ளிட்ட பஸ்நாயக்க நிலமேக்களுடனும் பெரஹரவுக்கு நேரடி பங்களிப்பை வழங்கிய அரச அதிகாரிகளுடனும் புகைப்படத்திற்கு தோற்றினார்.

தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களினால் சந்தேஷப் பத்திரம் கையளிக்கப்பட்டது.

எசல பெரஹர நிதியத்தினால் வெளி தேவாலயங்களுக்காக வழங்கப்படும் நிதி உதவி ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே “புண்ணிய தலதா கலாசாரம்” என்ற நூலை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி, பண்டைய பாரம்பரியங்களுடன் பெரஹரவை வெற்றிகரமாக நடத்தி முடிக்கக் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

“பெரஹர எமது மதிப்பு வாய்ந்த கலாசார விழாவாகும்.” தேசிய கலைஞர்களினது திறமைகளைப் போன்றே பாரம்பரிய மரபுரிமைகளான கலை அம்சங்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பெரஹரவுக்காக யானைகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் தோன்றியது. மீண்டும் அவ்வாறான ஒரு நிலை தோன்ற இடமளிக்கப்படாமல், பெரஹரவில் பயன்படுத்தப்படும் யானைகளை கலாசார மற்றும் உரிமைகளில் ஒரு பகுதியாக பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

தலதா புனித சின்ன ஆசிர்வாதத்திற்கு ஏற்ற ஒரு நாடே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஒழுக்க நெறிகொண்ட நாடொன்றை கட்டியெழுப்புவதன் மூலம் அந்நோக்கத்தை அடைய முடியுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மேலும் தெரிவித்தார். “சுபீட்சத்தின் நோக்கு” பத்தம்ச வேலைத்திட்டத்தின் மூலம் பண்பாடுடைய சமூகமொன்றை கட்டியெழுப்புவதாக வாக்குறுதியளித்ததை ஜனாதிபதி அவர்கள் நினைவுகூர்ந்தார்.

ஒரு மாதமளவில் நாடு பூராகவும் மேற்கொண்ட விஜயத்தில் பல்வேறு தரப்பினரும் முன் வைத்த தேவைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். சிக்கலற்ற காணி, பயிர்ச் செய்கைக்காக உகந்த நிலம், நிரந்தர வீடு மற்றும் பிள்ளைகளின் கல்விக்காக தேசிய பாடசாலை போன்றவையே அவர்களின் மிக முக்கிய வேண்டுகோள்களாகும்.

பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்களில் திறமையான குழுவொன்றை அமைச்சரவைக்கு தெரிவு செய்து, மேலே குறிப்பிட்ட தேவைகளை நிச்சயமாக நிறைவேற்றுவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். மீண்டும் ஒரு முறை இவ்வாறான பிரச்சினைகளை கேட்பதற்கு இடமளிக்காமல் நிரந்தரத் தீர்வுகளை பெற்றுத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பண்டைய அரச பரம்பரை பயணித்த பாதையில் தலதா சின்னத்துக்காக செய்யக்கூடிய கௌரவங்களை அரச தலைவராக தான் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திருமதி அயோமா ராஜபக்ஷ அம்மையார், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புனித தலதா மாளிகை பெரஹெர நிகழ்வை நிறைவுசெய்யும் செய்தியை அறிவிக்கும் நிகழ்வில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை

(2020-08-04, கண்டி ஜனாதிபதி மாளிகையில்)

தலதா பெரஹெர நிகழ்வை புராதன சடங்குகள் மற்றும் நடைமுறைகளுடன் உரிய முறையில் நடத்தி அதனை சம்பிரதாயபூர்வமாக நிறைவுசெய்ய வருகை தந்துள்ள தியவடன நிலமே உட்பட நான்கு தேவாலயங்கள் மற்றும் ஏனைய தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமே உட்பட அனைவரையும் இந்நாட்டின் பௌத்த மக்களின் சார்பாக வரவேற்கிறேன்.

புனித தலதா சின்னதுக்கு  செய்ய வேண்டிய வழிபாடுகள், கௌரவங்களை புராதன சடங்குகளுக்கமைய நிறைவுசெய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இம்முறை வருடாந்த தலதா பெரஹெர நிகழ்வை சுகாதார விதிமுறைகளைப் பேணி மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்கு முடியுமாக இருந்தது.

இதற்காக மல்வத்து பீடத்தின் மகா நாயக்க சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினர் வழங்கிய  வழிகாட்டல், ஆசிர்வாதத்தை மிகவும் மரியாதையுடன் நினைவுகூர்கிறேன்.

வரலாற்று ரீதியாக எமக்குள்ள பொறுப்பை நிறைவேற்றிய மகிழ்ச்சியை நாம் அனைவரும் இன்று உணர்கின்றோம். தலதா புனித சின்னம் எமது புனிதத்துவம் வாய்ந்த ஸ்தளமாகும். நாம் புத்த பெருமானுக்கு வழங்குகின்ற கௌரவத்தை அவ்வாறே தலதா புனித சின்னத்துக்கும் வழங்குகின்றோம். ஆயிரத்து எழுநூற்று பத்தாவது தலதா பெரஹெர நிகழ்வை நடத்தி நாம் அந்த எமது பண்டைய சடங்குகளை பாதுகாத்தோம். முன்னோக்கி கொண்டு வந்தோம். முன்னைய அரசர்கள் சென்ற வழியையே நாம் பாதுகாத்தோம்.

கௌரவ பிரதமர் அவர்களே, தியவடன நிலமே அவர்களே, வருகை தந்திருக்கின்ற அதிதிகளே,

தலதா புனித சின்னம் எமது நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நாளில் இருந்து நாம் அதற்கு தேசமாக அர்ப்பணித்தோம். பல்வேறு காலங்களில் தலதா புனித சின்னத்துக்காக செய்ய வேண்டிய பூஜை வழிபாடுகளை தடைகள் வந்தாலும் நாம் தலதா புனித சின்னத்தை பாதுகாத்த மக்களாகும். பல்வேறு ஆக்கிரமிப்புக்கள், எதிரிகளின் தடைகள் இருந்தாலும் எமது மகாசங்கத்தினர் புத்த பெருமானுக்கு வழங்குகின்ற கௌரவத்தை வழங்கிய வரலாறு எமக்கு உள்ளது. அந்த வரலாற்றை படிக்கும்போது பெருமையுடன் அளப்பரிய மரியாதை, நாம் என்ற உணர்வொன்றும் எமக்கு ஏற்படுகின்றது. தலதா புனித சின்னத்;தை  பாதுகாத்ததை விடவும் அதன் ஆசிர்வாதத்தினால், எமது தாய் நாடு, இந்நாட்டின் மக்கள், பாதுகாக்கப்பட்டதாக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம்.

தலதா புனித சின்னம் இலங்கை பூமியில் எமது நாட்டில் இருக்கின்ற புனித சொத்தாகவே நாம் மதிக்கின்றோம். நாட்டுக்கும் மக்களுக்கும் ஏதாவது துன்பங்கள் வரும்போது எமக்கு ஞாபகம் வருவது தலதா புனித சின்னத்தின் ஆசிர்வாதத்தையாகும்.

ஆதிகாலம் முதல்  நாடு என்ற வகையில், தேசம் என்ற வகையில் நாம் ஆபத்தில் சிக்கிய நேரத்தைப் போல் ஆபத்தை காணும்போது தலதா புனித சின்னத்தை நினைவுபடுத்திக்கொள்வது எமது பழக்கமாக மாறியுள்ளது.

தலதா புனித சின்னத்தின் ஆசிர்வாதம் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டு மக்களின் உயிர்வாழ்கின்ற அநுபவம், கீர்த்தி ஸ்ரீ மேகவர்ண அரசரின் காலம் முதல் எமது நாட்டு மக்கள் மரியாதையுடன் தலதா புனித சின்னத்துக்கு முன்னால் கூப்பிய கைகளை இன்றும் நாம் காண்கின்றோம். அந்த சாது நாதம் தினந்தோரும் தேசத்தின் முன்னேற்றத்துக்காக அதிகமாக கேட்க ஆரம்பித்துள்ளது.

அதுதான் தலதா புனித சின்னத்தின் ஆச்சரியம். தலதா புனித சின்னத்துக்காக பெரஹெர நிகழ்வை நடத்தி நாம் காட்டுவது அந்த சம்பிரதாயத்தையாகும். பொறுப்பை போன்று எமக்குள்ள கௌரவத்தையும் ஆகும்.

தலதா புனித சின்னம் இருப்பது நாடு பெற்ற பாக்கியமாகும். உலகத்தில் பௌத்தர்கள் வாழ்கின்ற எந்த நாட்டிலும் அந்த அதிஷ்ட உரிமை இல்லை.

ஆயிரத்து எழுநூற்று பத்தாவது தலதா பெரஹர இந்நாட்டு வரலாற்றில் எழுதப்படுவது பண்டைய எமது அந்த உன்னத அர்ப்பணிப்புகளுடனாகும். கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு முகம்கொடுத்த போதும் புனித தலதா சின்னத்திற்காக செய்யும் பணியை எமக்கு கைவிட முடியாது. அது முழு தேசத்தினதும் எதர்பார்ப்பாகும். முழு பௌத்த உலகினதும் பிரார்த்தனையாகும்.

புனித தலதா சின்னத்தின் ஆசிர்வாதத்திற்கு பொருத்தமான ஒரு நாட்டை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஒழுக்கப்பண்பாடான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே எமக்கு அந்த மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும்.

அதன் காரணமாகவே சுபீட்சத்தின் நோக்கு பத்தம்ச வேலைத்திட்டத்தில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் மக்களுக்கு உறுதிமொழி வழங்கினோம். அனைவருக்கும் நீதியை வழங்கக்கூடிய ஒரு சமூகமே எமக்கு தேவை.

எமது நாட்டில் அமைதியான சமூகமொன்றை காணவேண்டும் என்பதே எம் அனைவருடையவும் எதிர்பார்ப்பாகும். அதற்காக வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நான் பௌத்த ஆலோசனை சபையை அமைத்தேன்.

எமது மகாநாயக்க தேரர்கள், அநுநாயக தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினர் அனைவரும் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதந்து எமது நாட்டுக்கு தேவையான வழிகாட்டல்களை எமக்கு வழங்குகின்றனர்.

தேரர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய இந்த நாட்டை கட்டியெழுப்பவும் நாட்டின் மரபுரிமைகளை பாதுகாக்கவும் நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். பிக்குகளின் பணிக்கு வரலாற்று சம்பிரதாயங்களுக்கு இடமளிப்பது எனது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பெரஹர எமது மதிப்புவாய்ந்த கலாசார விழாவாகும். சுதேச கலைஞர்களின் திறமைகளையும் பாரம்பரிய மரபுரிமைகளான கலை அம்சங்களையும் பண்டைய காலம் முதல் நாம் பாதுகாத்துவந்துள்ளோம். இந்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

கடந்த காலங்களில் விகாரைகள், தேவாலைகளில் பெரஹரவிற்கு யானைகளை வழங்குவதில் பிரச்சினைகள் இருந்துவந்தன. மீண்டும் அத்தகைய நிலைமை உருவாகாது. அது எமது கலாசாரம், மரபுரிமையின் ஒரு பகுதி என்பதால் அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாம் கிழக்கில் தொல்பொருள்களை பாதுகாப்பதற்கு தேரர்களின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தோம். தேரர்கள் குறிப்பிடுவதைப் போன்று நாட்டிலுள்ள தொல்பொருள்களில் 99 வீதம் பௌத்த தொல்பொருள்களாகும்.

அதன் தொல்பொருள் பெறுமானத்திற்கும் சமய பெறுமானத்திற்கும் இடமளிக்கப்படவேண்டும். தொல்பொருள் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது இந்நாட்டுக்கு பொருத்தமான சட்டமொன்றை நிறைவேற்றுவதற்காகும்.

அது மட்டுமல்ல இந்நாடு நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும், கல்விமான்களின் கோரிக்கையாகவிருந்த தேசிய கல்விக் கொள்கை வரைபு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பல துரைகள் சம்பந்தமான தேசிய கொள்கை எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் போது பௌத்த ஆலோசனை சபையின் வழிகாட்டல்களை நாம் பெற்றுக்கொள்வோம்.

எதிர்காலத்தில் இந்நாட்டை பொறுப்பேற்கும் எந்த ஒருவருக்கும் அந்த கொள்கையின் படி நாட்டை முன்கொண்டு செல்ல முடியும். அரசாங்கங்களுக்கு ஏற்ப வேறுபடும் சில கொள்கைகள் காரணமாக எமது நாட்டுக்கு ஏற்படும் பின்னடைவுகளை நாம் சரியாக விளங்கிக்கொண்டுள்ளோம்.

கடந்த சுமார் ஒரு மாத காலமாக நான் நாடு பூராகவும் சுற்றுப் பயணம் செய்தேன். பல்வேறு மக்கள் தரப்பினரை சந்தித்தேன். அவர்களது தேவைகளை கண்டறிய முடிந்தது. பிரச்சினைகள் இல்லாத காணி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலம், நிலையான வீட்டு வசதி, பிள்ளைகளின் கல்விக்கு தேசிய பாடசாலை, குடிநீர் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அத்தேவைகளை நான் கட்டாயம் நிறைவேற்றுவேன். அதற்காக பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவாகும் உறுப்பினர்களில் திறமையானவர்களை  அமைச்சரவைக்கு நியமித்து செயற்பட நான் தயாராகவுள்ளேன். மீண்டும் இப்பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு நான் இடம் வைக்கப் போவதில்லை.

கௌரவ பிரதமர் அவர்களே, தியவதன நிலமே அவர்களே, அதிதிகளே,

அரச ஊழியர்கள் வினைத்திறனாக இல்லாத போது நாடு முன்னே செல்லாது. ஊழல் மோசடியற்ற ஒரு நாட்டில் அபிவிருத்தி இலக்குகள் இலகுவானது என்பதை நான் அறிவேன். அதே போன்று பாதாள உலகம், போதைப்பொருள் உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகள் இந்த சமூகத்தை அழிப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

எமது கலாசாரம், பல்லாயிரக் கணக்கான வருடங்கள் பாதுகாக்கப்பட்ட எமது மரபுரிமைகள் பற்றி எமக்கு சரியான தெளிவு தேவை. விகாரைகள், பள்ளிகள், கோவில்களின் மூலம் கட்டியெழுப்பப்படும் சமூகத்தை பணத்தின் மூலம் கட்டியெழுப்ப முடியாது.

வரலாற்றில் அரச பரம்பரை பயணித்த பாதையில் சென்று தலதா புனித சின்னத்திற்கான அனைத்து கௌரவத்தையும் வழங்க நாட்டின் தலைவன் என்ற வகையில் நான் கடப்பாட்டை கொண்டுள்ளேன். இப்புனித சின்னம் உள்ள பூமியை சுதந்திரமும் அமைதியும் நிறைந்த பூமியாக மாற்றுவதற்கு வரலாற்று பாரம்பரியங்களை மறந்துவிடாது நான் செயற்படுவேன். அது எனது பொறுப்பு.

எனவே தலதா புனித சின்னத்திற்காக வழங்கப்பட்டுள்ள வரலாற்றுப் பொறுப்பையும் அரசாங்கத்தின் கடமையையும் நிறைவேற்ற நான் தயாராகவுள்ளேன். எமது கீர்த்தி, எமது மரபுரிமை பாதுகாக்கப்பட்டால் மட்டுமே எதிர்கால தலைமுறைக்காக நாட்டின் இருப்பை பாதுகாக்க முடியும்.

அரசாங்கம் கடந்த காலத்தில் மேற்கொண்ட தீர்மானங்களில் உங்களுக்கு அந்த தொலைநோக்கை நாம் வெளிப்படுத்தியுள்ளோம். இந்நாட்டை சுபீட்சம் நிறைந்ததாக மாற்றி சிறந்த பிரஜைகள் உருவாகும் போது தேசிய, சமய  நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் போது எமது உன்னத தலதா சின்னம் என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

உங்கள் அனைவருக்கும் புனித தலதா சின்னத்தின் ஆசிகள்.

(English) Recent News

Most popular