Presidential Secretariat of Sri Lanka

‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1392 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1392 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் பேராசிரியர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி 192,516 ரூபாவையும் மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்தின் தலைவர் சங்கைக்குரிய மெதிரிகிரியே அஸ்ஸஜி தேரர் 100,000 ரூபாவையும் கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவு 4,484,500 ரூபாவையும் கொவிட் நிதியத்திற்காக ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர்.

பட்டுவிட்ட வன சேனாசனாதிபதி சங்கைக்குரிய கம்புறுகமுவே வஜிரசீஹ தேரர் நேரடியாக அன்பளிப்பு செய்த தொகை 100,000 ரூபாவாகும்.

உடுதும்பர பிரதேச செயலக பிரிவின் ஊனமுற்றவர்களின் சுவசக்தி அமைப்பு 50,000 ரூபாவையும் உடுதும்பர பிரதேச செயலகத்தின் சமூக சேவை அதிகாரி ஏ.டப்ளியு.ஏ.கே.அமுனுகம 10,000 ரூபாவையும் பெலருசின் கோமல் (Gomal) பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் 1,85,000 ரூபாவையும் திருமதி புத்தினி ஜினதாச 100,000 ரூபாவையும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜயதிலக 40,000 ரூபாவையும் சட்டத்தரணி வினுர ஜயவர்தன 10,000 ரூபாவையும் அரசசார்பற்ற அமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜா குணரத்ன 88,000 ரூபாவையும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி இந்திரபால கே.கப்புகே 10,000 ரூபாவையும் இந்நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,392,909,182.76 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இடுகம கொவிட் 19 நிதியத்தின் நோக்கங்களில் முக்கியத்துவம் பெறுவது கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இயலுமையை அதிகரித்தல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதாகும். அதன்கீழ் PCR பரிசோதனைக்காக ஒதுக்கியுள்ள தொகை 200 மில்லியன்களாகும். அதில் 06 மில்லியன் ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

(English) Recent News

Most popular