Presidential Secretariat of Sri Lanka

‘‘இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,378 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,378 மில்லியனாக அதிகரித்துள்ளது.

”ஹெல ரணவிரு பலமுலுவ” அநுராதபுர மாவட்ட கிளை 291,000 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது. அதற்கான காசோலை இன்று (12) பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அமானா வங்கி நிறுவனம் 1,000,000 ரூபாவையும் Distillaries Company of Sri Lanka நிறுவனம் 900,000 ரூபாவையும் திருமதி ஜே.பீ சித்ரசீலி 5,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,378,963,920.06 ரூபாவாகும்.

உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

(English) Recent News

Most popular