Presidential Secretariat of Sri Lanka

‘இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,374 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,374 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாண கல்வித் திணைக்களம் 14,133,164.86 ரூபாவையும், வரையறுக்கப்பட்ட மத்திய மாகாண கல்விச் சேவைகள் சேமநிதி, கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான கூட்டுறவு சங்கம் 200,000 ரூபாவையும், நோர்வூட் பிரதேச சபை தலைவர் திரு. கே.கே. ரவி 50,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். அவற்றுக்கான காசோலைகள் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே அவர்களினால் இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

ஊவா மாகாண ஆளுநர் உள்ளிட்ட மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்புச் செய்த 11,612,217.02 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் ராஜா கொல்லுரே அவர்களினாலும், தென் மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்புச் செய்த 20,273,541.85 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் விலீ கமகே அவர்களினாலும், வட மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு செய்த 3,000,000 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் அவர்களினாலும், கிழக்கு மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு செய்த 40,000,000 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் தலைமை செயலாளர் பீ.வனிகசிங்க அவர்களினாலும், மேல் மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு செய்த 20,000,000 ரூபாவுக்கான காசோலை ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் டபிள்யு.டீ.எம்.ஜே ரொஷான் குணதிலக  அவர்களினாலும் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

 

Dial Textile Industries (Pvt) Ltd நிறுவனம் 3,000,000 ரூபாவையும், திரு. நீல் உமகிலிய 1,000,000 ரூபாவையும், Lion Vision for Sight Hospital Trust நிறுவனம் 10,000,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். இவற்றுக்கான காசோலைகள் இன்று ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

Sri Lanka – Australia – New Zealand Business Council (The Ceylon Chamber of Commerce) நிறுவனம் 500,000 ரூபாவையும் சட்டத்தரணி டீ.லக்சிறி மெண்டிஸ் 500,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,374,575,492.89 ரூபாவாகும்.

உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

(English) Recent News

Most popular