Presidential Secretariat of Sri Lanka

மிஹிந்தலை மின்னொளி பூஜையை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

மாபெரும் தேசிய பொசன் நிகழ்வுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மிஹிந்தலை மின்னொளி பூஜையின் இரண்டாவது நாள் நிகழ்வினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (05) ஆரம்பித்து வைத்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தினதும் இலங்கை மின்சார சபையினதும் இணை அனுசரணையில் 58வது தடவையாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூன்று நிகாயக்களினதும் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக தேரர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் புனித தந்தத்தை வழிப்பட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

இன்று அனுஷ்டிக்கப்படும் “உலக சுற்றாடல் தினத்தை” முன்னிட்டு ஜனாதிபதி அவர்கள் மிஹிந்தலை ரஜமகா விகாரை வளாகத்தில் குங்கிளிய மரக்கன்றொன்றை நாட்டினார்.

முழு உலகையும் ஆட்கொண்டிருக்கும் நோய்த்தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்க முடிந்ததைப் போன்று இலங்கையின் பல்வேறு உற்பத்திகளை மிகவும் குறுகிய காலத்தில் நாட்டுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்திற்கு முடிந்திருப்பதாக மிஹிந்தலை ரஜமகா விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரத்ன தேரர் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

மல்வத்தை பீடத்தின் அனுநாயக தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் விசேட அனுசாசன உரையை நிகழ்த்தினார். வீர, தீரமான, வளமான பண்புகளை கொண்ட ஆட்சியாளருக்கு அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரச தலைவர் சமயத்திற்கும் அறநெறிப் போதனைகளுக்கும் ஏற்ப செயற்படுவதன் காரணத்தினால் கடந்தகாலத்திலிருந்த செழிப்பை தற்காலத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக தேரர் எத்கந்த ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர் குறிப்பிட்டார்.

இலங்கை அமரபுர மகாநிகாயவின் தலைவர், அமரபுர சூலகன்டி பீடத்தின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய கங்துனே அஸ்ஸஜி தேரர், இலங்கை ராமான்ய மகா நிகாயவின் அனுநாயக தேரர் சங்கைக்குரிய மாதலே தம்மகுசல நாயக தேரர் ஆகியோர் விசேட அனுசாசன உரைகளை நிகழ்த்தினர்.

மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மிஹிந்தலை புண்ணிய பூமியில் மின்னொளி பூஜையை ஆரம்பித்துவைத்தார்.

அமைச்சர்களான எஸ்.எம். சந்திரசேன, பந்துல குணவர்த்தன, ஆளுநர் மகீபால ஹேரத், முன்னாள் அமைச்சர்களான துமிந்த திஸாநாயக, திஸ்ஸ கரல்லியத்த, ஷெஹான் சேமசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular