Presidential Secretariat of Sri Lanka

நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 வரை…

நாளை, 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

நோய்த்தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இவற்றில் அடங்கும்.

அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர் எண்ணிக்கை மற்றும் யாரை சேவைக்கு அழைப்பது என்பதை அந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாளாந்த பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை, 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.

(English) Recent News

Most popular