விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.
அத்தோடு மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி வழங்குவதற்கான வசதி அளிக்கவும் கொரியா சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
கொரிய சிறிய அளவிலான வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில், கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு இலங்கையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் கொரியா சிறிள அளவிலான தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் கிம் சுங் ரேங் (Kim Chung Ryong) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.