Follow Us:

Thursday, Nov 14
நவம்பர் 13, 2024

ICTA பணிப்பாளர் சபையின் முதல் கூட்டம் இன்று

புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக் கூட்டம் (13) பிற்பகல் இடம்பெறவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் நன்மைகளை ஈட்டித்தரக்கூடிய, வலயத்தின் வளர்ச்சி கண்ட நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பலப்படுத்தல் தொடர்பிலான தனது அர்ப்பணிப்பு மற்றும் நோக்கத்தை வௌிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பிலான தலைமை ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய அதன் நிறைவேற்று அஸ்தஸ்த்தற்ற தலைவராக செயற்படுவார்.

சஞ்ஜய கருணாசேன,ஹர்ஷ புரசிங்க,சந்திம குரே,பந்துல ரணதுங்க,ஜெப்ரி சுல்பர், சாமிஸா அபேசிங்க, ஷானுக ரெபெல் ஆகியோர் தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களாவர்.

தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் நிறைவேற்று அஸ்தஸ்த்தற்ற தலைவராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய (ICT) துறையில் 30 வருடங்களுக்கு மேலதிகமான சேவையில் ஈடுபடுகிறார். விருதுபெற்ற தொழில்துறைகளுக்கு பங்களிப்பை வழங்கியுள்ள அவர் கேம்பிரிட்ஜ், பிரிஷ்டல், வோர்விக் பல்கலைக்கழகங்களில் பட்டங்களை பெற்றுள்ளதுடன், Unique Digital Identity வேலைத்திட்டம் உள்ளிட்ட இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், அவர் Axiata,GSMA உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் Srilankan Airlines நிறுவனங்களில் பணிப்பாளராக பதவி வகித்துள்ளார்.

பணிப்பாளர் சபையிலுள்ள சஞ்சய கருணாசேன அரச சேவையில் டிஜிட்டல் மயமாக்கலை பயன்படுத்துதல் தொடர்பிலான முன்னோடி என்பதோடு, நிறைவேற்று ஆலோசகராகவும் Enterprise Software Architect ஆகவும், பல்திறன் மற்றும் தொழில்நுட்பவியலாளரும் ஆவார்.

இத்துறைக்குள் 26 வருட அனுபவத்தை கொண்டிருக்கும் அவர், Virtusa மற்றும் WSO2 உள்ளிட்ட உலக மென்பொருள் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். 2008 – 2013 இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) தலைமைய தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியுள்ளதோடு, Nimbus Venture (Pvt) Ltd, Pontoon (Pvt) Ltd, மற்றும் Digital Democracy Collective இணை ஸ்தாபகரும் ஆவார். சஞ்சய கருணாசேன மொரட்டுவ பல்கலைக்கழகத்தில்

கணினிப் பொறியியலில் இளங்கலை விஞ்ஞானம் மற்றும் கணினி விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

ஹர்ஷ புரசிங்க முன்னணி தொழில்நுட்ப தொழில்முனைவோரில் ஒருவர். Eisenhower Fellow உறுப்பினர், குறிப்பிடத்தக்க மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் 25 மேலான அனுபவத்தை கொண்டவர். அவர் பல தொழில்களை தொடங்கியுள்ளவர் என்பதோடு, 90 களில் இலங்கையின் வெற்றிகரமான உயர்தர பாடசாலை ஆரம்ப வணிகமாக குறிப்பிடக்கூடிய (Microimage) குழுமம் மற்றும் MiHCM மற்றும் Futura Tech Labs ஆகியவற்றின் ஸ்தாபராகவும், இணை ஸ்தாபகராகவும் இவரே உள்ளார். புரசிங்க தற்போது MiHCM தலைவராக செயற்படுகிறார். 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் நிறுவனமாகவும் 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தாக்கம் செலுத்தும் உலக விருதுகளை வென்ற HRTech SaaSki நிறுவனமாகும். 2007 ஆம் ஆண்டு அவர் ” இலங்கை தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான தொழிலதிபர்” விருது மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான “Eisenhower புத்தாக்க புலமைப்பரிசில்” விருது பெற்றார். மிக கௌரவமான தொழில் உரிமையாளரான இவர் உலக தொழில்நுட்ப மாநாடுகளில் விரிவுரையாளராகவும் பங்கேற்கிறார்.

சந்திம குரே சுகாதார சேவை, தயாரிப்பு மற்றும் விநியோகத் துறைகளின் வர்த்தக பரிவர்த்தனை செயற்பாடுகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் 25 வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவர். தற்போது அவர் Acornic Ventures நிறுவனத்தின் பங்குதாரர் என்பதோடு, Ayubo.life என்ற டிஜிடல் மருத்துவ நிறுவன நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஆவார். இதற்கு முன்னர், அவர் ஹெமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் அதிகாரியாகவும் டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஆரம்பம் மற்றும் புத்தாக்க முயற்சிகளை முன்னோக்கி கொண்டுச் செல்ல பாரிய சேவையாற்றியுள்ளார். சந்திம குரே உயர் நிலை கல்வி நிறுவனங்களில் நிர்வாக கல்வியை தொடர்ந்திருப்பதுடன் யுனிலீவர் மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் போன்ற உயர் பதவிகளை வகித்திருக்கிறார்.

பந்துல ரணதுங்க இலங்கை அரச நிர்வாக முறைமை மாற்றம் மற்றும் டிஜிட்டல் மாற்றங்கள் தொடர்பில் 20 வருட அனுவம் கொண்ட அரசாங்க அதிகாரியாவார். மேலும் அரச நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பிலான நிபுணரும் ஆவார். அரச நிர்வாகம் மற்றும் ஈ – அரச நிர்வாகம் தொடர்பிலான கல்விமானி பட்டம் பெற்றவர். மாகாண நிர்வாகம், புதிய நகரங்களுக்கான ஆரம்பம், சுகாதார சேவை, பொதுப் போக்குவரத்து சேவை, பெருந்தோட்ட தொழில்துறை , கணினிப் தானியக்க மொழித் திட்டங்கள், அரச துறையில் கணினி அறிவை பலப்படுத்தல் உள்ளிட்ட பல துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் பலவிதமான அனுபவங்களை கொண்டவர். மாகாண சபைகள் அமைச்சு, இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்ததோடு, உயர் கல்வித்துறை மறுசீரமைப்பு மற்றும் அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பிலான மேலதிக விரிவுரையாளராகவும் செயற்படுகிறார்.

ஜெப்ரி சுல்பர் தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் (FITIS) டிஜிட்டல் பிரிவின் முன்னாள் தலைவர். இவர், இலங்கையை டிஜிட்டல் வரைபடத்தில் உள்வாங்கி வலுவான தொழில்நுட்ப முறையுடன் PickMe சேவையை உருவாக்கிய Digital Mobility Solutions Lanka Ltd நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார். இத்துறையில் அவரது அர்ப்பணிப்புக்காக 2018 ஆம் ஆண்டில் FCCISL இனால் இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய வௌ்ளிப் பதக்கம் வழங்கப்பட்டதுடன், 2014 ஏப்ரல் மாதம் நடைபெற்ற FCCISL விழாவில் இளம் தொழில் முயற்சியாளருக்கான விருதும், 2006 ஆம் ஆண்டில் ICTA இளம் தொழில்நுட்ப தொழிலுக்கான விருதையும் பெற்றுக்கொண்டார்.

சாமிஸ அபேசிங்க AI, middleware தொழில்நுட்பம், full-stack அபிவிருத்தி மற்றும் தயாரிப்பு முகாமைத்துவம் பற்றிய விரிவான அனுபவமுள்ள மென்பொருள் பொறியியல் விஞ்ஞானம் பற்றிய புகழ்பெற்ற நிபுணர் ஆவார். Avinya மன்றத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிய அவர், கல்வி நிறுவனங்களுக்கான டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியவர் என்பதுடன், தகவல் தொழில்நுட்ப தொழில் வேலைத்திட்டங்களும் இவராலேயே முன்னெடுக்கப்படுகிறது. ICTA தீர்வுக்கான அதிகாரியாகவும் WSO2 வின் விநியோக மற்றும் பொறியியல் நிறுவனத்தின் பிரதித் தலைவராகவும பதவி வகித்துள்ள இவர், தொழில்நுட்ப ஆலோசனை, கணினி கல்வி மற்றும் பொறியாளர் பற்றிய பட்டதாரியாவார். பிரஜைகள் மேம்பாட்டு ஆலோசகராகவும் செயலாற்றுகிறார்.

ஷானக ரெபெல் டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வுகள், ஆலோசனை மற்றும் தலைமைத்துவப் சேவைகளில் 23 வருட அனுபவம் கொண்டவர். தற்போது, ஸ்ட்ரெச்லைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதான டிஜிட்டல் மற்றும் பரிவர்த்தனை அதிகாரியாக பணிபுரியும் இவர், டிஜிட்டல் அறிவு மற்றும் பரிவர்த்தனை தொடர்பிலான புதிய அமைப்புக்களையும் இயக்கி வருகிறார். அவர் Industry 4.0 தரவு ஆய்வு, தானியக்க ஆக்கபூர்வ செயற்பாடுகள், மற்றும் பாதுகாப்பு API சுற்றுச்சூழல் அமைப்புகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஷானக ரெபெல் அவர் மொரட்டு பல்கலைக்கழகத்தில் கணினி கல்வி மற்றும் பொறியியல் பட்டதாரியாவார் என்பதோடு MBA பட்டத்தையும் PMP சான்றிதழையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

Top