அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை (10) காலை 11.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும்.
அமெரிக்க புதிய இறக்குமதி வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது தெளிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.