Follow Us:

Wednesday, Jan 08
ஜனவரி 6, 2025

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா (Stanislaus Joseph Yogarajah)மற்றும் லரீனா அப்துல் ஹக் (Lareena Abdul Haq) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.

Top