Follow Us:

Friday, Mar 14
மார்ச் 12, 2025

ஹம்பாந்தோட்டை சென்.மேரிஸ் தேசிய பாடசாலை, நாகுலுகமுவ மொரகெடிஆர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவ மாணவியர் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வருகை

ஹம்பாந்தோட்டை சென்.மேரிஸ் தேசிய பாடசாலை, நாகுலுகமுவ மொரகெடிஆர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கொழும்பு 10 நாலந்தா கல்லூரி மாணவ மாணவியர் இன்று (12) ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலாவாக இவ்வாறு ஜனாதிபதி அலுவலகம் (பழைய பாராளுமன்றம்) மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி சுற்றுலாவுடன் இணைந்ததாக, அரசாங்கத்தின் முன்னோடி வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தௌிவூட்டப்பட்டது.

இதன்போது, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என்.குமாரசிங்க “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தௌிவூட்டினார். பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறிவு,திறன் மற்றும் அணுகுமுறையை மேம்படுத்துவது இதன் நோக்கமாக அமைந்தது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரிய பண்டார சீ.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கரா எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் பாடசாலை மாணவர்களுக்கு ஔியாக இருப்பார் என தெரிவித்தார்.

அதேபோல் பல நாடுகள் மக்களின் முயற்சியினாலே​யே முன்னேற்றத்தை நோக்கி சென்றிருப்பதாக சுட்டிக்காட்டிய சூரிய பண்டார,தனி நபர் என்ற வகையில் எம்மால் செய்யக்கூடியதை தவறாமல் செய்ய வேண்டும் என்றும், எமது பங்கை நிறைவு செய்த பின்னர் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்ப முடியுமெனவும் கூறினார்.

அத்தோடு, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளர் அநுருத்த லொக்குஹபுஆரச்சி ஆகியோரால் பாடசாலைகளில் நினைவு சின்னமாக வளர்ப்பதற்கு பெறுமதியான மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழாம், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Top