2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு அங்கமாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செலவு தலைப்புக்கு அமைவான வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன,விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பி.விக்ரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் இதன்போது கலந்துகொண்டனர்.