Follow Us:

Thursday, Jan 02
அக்டோபர் 25, 2024

ஈரான் தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பு

ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் (Masoud Pezeshkian) விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், நாட்டுக்குள் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு தொடர்புகள் குறித்து இதன்போது நினைவுகூறப்பட்டதுடன், பல துறைகள் ஊடாக ஈரான் – இலங்கை தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதே தனது நோக்கமாகும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அது குறித்து சாதகமான பதில்களை கூறிய ஈரான் தூதுவர் வர்த்தகம்,தொழில்நுட்பம், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைத்திட்டங்களுக்கு இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

Top