Follow Us:

Thursday, Apr 03
நவம்பர் 6, 2024

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவிப்பு

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி பதிட்டுள்ளார்.

அந்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு:

“அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப் @realDonaldTrump அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமக்கிடையிலான உறவிலுள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்.”

Top