Follow Us:

Sunday, Jan 26
ஜனவரி 14, 2025

ஜனாதிபதி சீனா சென்றடைந்தார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 )சீன நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணித்த பாதையின் இருமருங்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​தொழில்நுட்பம் மற்றும் விவசாய மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல களப் பயணங்களிலும் பல உயர் மட்ட வணிகக் கூட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

இந்தப் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளன.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஜென்ஹொன்ங், சீனாவுக்கான இலங்கை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.

Top