Follow Us:

Wednesday, Feb 12
பிப்ரவரி 11, 2025

கொலன்னாவை மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தில் முதல் அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்

கொலன்னாவை மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தில் முதல் அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு என்பன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக செயற்படுத்தும் தொடர் வேலைத்திட்டங்களுடன் இணைந்ததாக இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சித் திட்டத்துக்கு இணையாக, கொலன்னாவ மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற சம்பிரதாயத்தின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் கடமைகள் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கருத்தியல் பெறுமதிகள் மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் ஆகியவற்றைப் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

மேலும், இதன்போது கொலன்னாவ மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்திற்கு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். இதன்போது மாணவர் பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் ஹன்ச அபேசேகர, பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயலத் பெரேரா மற்றும் கொலன்னாவ மகளிர் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

Top