Follow Us:

Saturday, Apr 19
ஏப்ரல் 7, 2025

“குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் குடிசனம், குடிசன வளர்ச்சி மற்றும் மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை பரவல் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திச் செயல்முறைக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசாங்கம் அல்லாத ஏனைய நிறுவனங்களுக்கு இந்த குடிசன கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை. குடிசன தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, டெப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது விசேட அம்சமாகும்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டி.டி.ஜி.ஏ. செனவிரத்ன உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Top